மேலும் செய்திகள்
வாகன விபத்தில் இரு பெண்கள் காயம்
07-Dec-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் 'ஜோ ஸ்போர்ட்ஸ்' அகாடமியில், மாவட்ட அளவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டி நடந்தது.இதில், 9 முதல் 17 வயது வரை (ஆண் மற்றும் பெண்) சிறுவர்கள், ஒற்றையர் பிரிவு இறகுப்பந்து போட்டி நடந்தது. கோவை, கிணத்துக்கடவு பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., பாரத நேரு மற்றும் 'ஜோ ஸ்போர்ட்ஸ்' அகாடமி நிர்வாக இயக்குனர் ஜோதி ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
07-Dec-2024