உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

அன்னுார்;மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் முதல் இடம் பெற்ற ஆறு பேர் மாநிலப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.பள்ளிக் கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின 'ரோடு சைக்கிளிங்' போட்டி அன்னுார் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என மாணவர் மாணவியருக்கு ஆறு பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தன. இதில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றோர் விபரம் வருமாறு :மாணவர்களுக்கான 14 வயது பிரிவு : சுகேஷ் (காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி) 17 வயது பிரிவு : பெபியன் ராய்ஸ் (மாதா மெட்ரிக் பள்ளி). 19 வயது பிரிவு : அஸ்வந்த் (எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி).மாணவியருக்கான 14 வயது பிரிவு : நவீனா (எஸ். ஆர். எஸ். ஐ., பள்ளி), 17 வயது பிரிவு: ஹாசினி (கோவைப்புதூர், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி) 19 வயது பிரிவு: கார்த்திகேயன் (எஸ்.ஆர். எஸ்.ஐ. பள்ளி).வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தீபா ஆகியோர் வழங்கினர்.சைக்கிள் போட்டியில் ஆறு பிரிவுகளிலும் தலா மூவர் என 18 பேர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ