மாவட்ட அளவிலான கோ-கோ; நேரு வித்யாலயா மெட்ரிக் வெற்றி
பெ.நா.பாளையம்; கோவை ரத்தினபுரியில் உள்ள கோ-கோ கழகம் மற்றும் கே.என்.ஜி., புதுாரில் உள்ள எம்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி இணைந்து, மாவட்ட அளவில் இரண்டு நாட்கள் கோ-கோ போட்டி நடத்தின. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்காக நடந்த இப்போட்டியில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 650 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிகளில், 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை சுகுணா ரிப்ஸ், விநாயகா வித்யாலயா, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி அணிகள் வென்றன. 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை செயின்ட் ஜான் பாஸ்கோ மெட்ரிக், பிருந்தாவன் வித்யாலயா, ஒக்கிலியர் வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றன. தொடர்ந்து நடந்த, 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களை நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, எம்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி, ஜான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றன. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் போட்டியில், முதல் மூன்று இடங்கள் முறையே சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணிகள் வென்றன.