மாவட்ட அளவிலான ஹாக்கி: கோல் மழை பொழிந்த அணிகள்
கோவை: கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மாணவர், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 அணிகள் பங்கேற்றன. ராகவேந்திரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.வி.எம்., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், 4--0 என்ற கோல் கணக்கில், ராகவேந்திரா அணி வென்றது. மாணவியர் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 9 அணிகள் பங்கேற்றன. எஸ்.ஆர்.வி.எம்., மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.ஜே.என்., பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், 7--0 என்ற கோல் கணக்கில், எஸ்.ஜே.என்., பள்ளி அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஈஷா பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், 4--0 என்ற கோல் கணக்கில் ஈஷா அணி வெற்றி பெற்றது.