உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துவக்கப்பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

துவக்கப்பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

உடுமலை ;உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணிந்துகொள்வது, வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது, பட்டாசு வெடிக்கும் நேரத்தில் அருகில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.அரசு அனுமதி வழங்கியுள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இவ்வாறு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பள்ளி வளாகத்தில் புஸ்வானம் போன்ற பட்டாசுகளை வெடித்தும்,மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தீபாவளியை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை