உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளிக்கு இன்னும் ஒரே வாரம்; இலவச வேட்டி, சேலை காணோம்

தீபாவளிக்கு இன்னும் ஒரே வாரம்; இலவச வேட்டி, சேலை காணோம்

தொண்டாமுத்தூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில், அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கான தீபாவளி வேட்டி, சேலைகள் இன்னும் வழங்கப்படவில்லை.தமிழக அரசு சார்பில், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு, மாதம் தோறும் அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையொட்டி, அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு, இன்னும், 7 நாட்களே உள்ள நிலையில், அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கான தீபாவளி வேட்டி, சேலைகள் இன்னும் தாலுகா அலுவலகங்களுக்கே வரவில்லை. குறுகிய காலமே உள்ளதால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பு, அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கு தீபாவளி வேட்டி, சேலைகள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக, அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கான தீபாவளி வேட்டி, சேலைகள், தீபாவளி பண்டிகைக்கு முன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை