உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாப்கின் எரியூட்டிகள் செயல்படுகிறதா? அறிக்கை கேட்கும் பள்ளிகல்வித்துறை

நாப்கின் எரியூட்டிகள் செயல்படுகிறதா? அறிக்கை கேட்கும் பள்ளிகல்வித்துறை

பொள்ளாச்சி : சானிடரி நாப்கின் எரியூட்டிகளை முழுமையாக பராமரித்து, பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என, அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவியரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், துணை சுகாதார மையங்கள் வாயிலாக, சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது.அதேபோல, பள்ளிகளில், சானிடரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளது. இதில், 5 ரூபாய் செலுத்தி, மாணவியர் நாப்கின் பெற்றுக் கொள்ளலாம். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும், பெண்கள் கழிப்பறைகளில் எரியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, நாப்கின் எரியூட்டிகள் முறையான பராமரிப்பில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பெண்கள் கழிப்பறையில், நாப்கின் எரியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் அவைகள் முழுமையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எரியூட்டியில், ஒரு நாப்கினை முழுமையாக அழிக்க, 5 முதல் 7 நிமிடம் தேவைப்படுகிறது. அதுவரை, மாணவியர் காத்திருக்க வேண்டியுள்ளது.மேலும், எரியூட்டியிற்கு மின் இணைப்பு வழங்கப்படுவதால், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. தற்போது, ஆசிரியைகள் வாயிலாக எரியூட்டியின் செயல்பாடு கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ