மேலும் செய்திகள்
'ஒரே நாடு; ஒரே ரேஷன்' பிற மாநிலத்தவர்கள் ஆர்வம்
17-Oct-2024
பொள்ளாச்சி: 'தீபாவளி பண்டிகையின் போது, வெளியூர் வியாபாரிகள், தெருவோர கடைகள் அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி கடை உரிமையாளர்கள் நல சங்கம், நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி கடை உரிமையாளர்கள் நல சங்கத்தினர், நகராட்சி கமிஷனர் கணேசனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி மிகவும் குறுகலானது. பண்டிகை காலங்களில் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், தெருவோர கடைகள் அமைப்பதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தியும், உள்ளூர் வணிகர்களை துயரத்துக்கு உள்ளாக்கும் வகையில், வெளியூர் வியாபாரிகள் ரோட்டோர கடை அமைத்து பொருட்களை விற்கின்றனர். வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க கூடாது. மேலும், நகராட்சி சார்பாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
17-Oct-2024