உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்ச்சலுக்கு பரிந்துரையின்றி மாத்திரை வாங்காதீங்க; டாக்டர் அட்வைஸ்

காய்ச்சலுக்கு பரிந்துரையின்றி மாத்திரை வாங்காதீங்க; டாக்டர் அட்வைஸ்

வால்பாறை; காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், மருந்துக்கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட் இல்லாமல் மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது என அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறினார்.சீனாவில் எச்.எம்.பி.வி., எனப்படும் ஹியூமன்மெட்டா நிமோ வைரஸ் பரவல் சமீப காலமாக அதிகரித்துள்ளது.நுரையீரலை தாக்கி சுவாசக்கோளாறு ஏற்படுத்தும் இந்த வகை தொற்று, குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது. வால்பாறை மலைப்பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் மட்டுமே பரவியுள்ளது.எச்.எம்.பி.வி., எனப்படும் ஹியூமன்மெட்டா நிமோ வைரஸ்தொற்று நோய் யாருக்கும் இல்லை.வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா கூறியதாவது:வால்பாறையில் சிதோஷ்ண நிலை மற்றத்தால், தற்போது கடும் பனிப்பொழிவு நிகழ்கிறது. இதனால் மக்களுக்கு வழக்கமான காய்ச்சல், தலைவலி உள்ளிட் பிரச்னைகள் வரும். குடிநீர் நன்றாக காய்ச்சிய பின் பருக வேண்டும்.குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், தன்னிச்சையாக கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது.ஒரு நாள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். மருத்துவமனையில் போதிய, மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளன.வைரஸ் காய்ச்சல் குறித்து வால்பாறை மக்கள் அச்சப்பட தேவையில்லை. வெளியிடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். உணவு அருந்தும் முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.தொண்டை வலி, சளி, உடல் சோர்வு இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனை டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். வால்பாறையில் யாருக்கும் எச்.எம்.பி.வி., வைரஸ் பரவல் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை