உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏங்க, பவானி ஆற்றில் ரீல்ஸ் எடுக்காதீங்க! கூமாப்பட்டி பாணிக்கு போலீசார் தடை

ஏங்க, பவானி ஆற்றில் ரீல்ஸ் எடுக்காதீங்க! கூமாப்பட்டி பாணிக்கு போலீசார் தடை

மேட்டுப்பாளையம்; 'மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இறங்கி ரீல்ஸ் எடுக்காதீங்க... கூமாப்பட்டி பாணியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேட்டுப்பாளையம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், கூமாப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள நீர்நிலைகளில் குளித்தும், தண்ணீரை குடித்தும், 'ஏங்க கூமாப்பட்டி வாங்க, காதல் தோல்வியா கூமாப்பட்டி வாங்க, தண்ணீர் சர்பத் போல் இனிக்குது... மூலிகை தண்ணீர்' என, பல்வேறு டயலாக்குகளை பல்வேறு தோரணைகளில் பேசி, ரீல்ஸ் வெளியிட்டார். இந்த ரீல்ஸ் டிரெண்ட் ஆன நிலையில், கூமாப்பட்டி டிரெண்ட் போல், 'எங்க ஊருக்கு வாங்க' என பலரும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரீல்ஸ் வெளியிட்டு, டிரெண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.நீர்நிலைகளில் அத்துமீறியும், அனுமதியில்லாத இடங்களுக்கு சென்றும் ரீல்ஸ் எடுத்து வெளியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில், பவானி ஆறு அல்லது வேறு ஏதாவது அனுமதிக்கப்படாத இடங்களில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-பவானி ஆறு அல்லது வேறு ஏதாவது அனுமதியில்லாத இடங்களில் உள்ள நீர்நிலைகளில் ரீல்ஸ் எடுக்க முயற்சிக்க வேண்டாம். ஆறு பார்க்க அமைதியாக தான் தெரியும்; திடீரென சீறிப் பாயும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பவானி ஆற்றில் ஆபத்தான பகுதிகள் அதிகம் உள்ளன. யாராவது அப்படி அத்துமீறி அனுமதிக்கப்படாத இடங்களில் ரீல்ஸ் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி