உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் கோடு போட்டாச்சு; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி

ரோட்டில் கோடு போட்டாச்சு; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி

வால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வெள்ளைக்கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டை மேம்படுத்தும் பணி நடக்கிறது. சாலையோரங்களை அழகுபடுத்தும் வகையில், 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆழியாறிலிருந்து வால்பாறை வரையிலான ரோட்டில், சேதமான பகுதிகள் சீரமைக்கும் பணி தற்போது நடக்கிறது.இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோடு, பச்சமலைரோடு, கருமலை, குரங்குமுடி, சோலையாறுடேம், சிறுகுன்றா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில்இருபுறமும் புதியதாக வெள்ளைக்கோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது.இதே போல், பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கும் வெள்ளை வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.மேலும், வால்பாறை நகரில் காமராஜ்நகர் முதல் ஸ்டேன்மோர் பிரிவு வரையிலும் ரோட்டை ஆக்கிரமித்து, கடைகளும், வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி, ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்பது, மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை