உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர், துாய்மை பணிகள் ஜரூர்; பேரூராட்சி சார்பில் நடவடிக்கை

குடிநீர், துாய்மை பணிகள் ஜரூர்; பேரூராட்சி சார்பில் நடவடிக்கை

ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறியதாவது:மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் பேரூராட்சி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான இடங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மொபைல் டாய்லெட், பொது கழிப்பிடம் என, 15 எண்ணிக்கையில் தயாராக உள்ளன. அனைத்து இடங்களிலும், துாய்மைப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பஸ் ஸ்டாண்ட் சுத்தப்படுத்தப்பட்டு, வாகனங்கள் நிறுத்தம் செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.இது தவிர, தனியார் 'பார்க்கிங்' வசதிகளும் ஏற்படுத்தி, வாகனங்கள் நிறுத்திச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் வழித்தடங்கள், கோவில் சுற்றுப்பகுதியில் ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளன. கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சுகாதாரத்துறை வாயிலாக, மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. தனியார் டாக்டர்களும், மருத்துவ சேவைக்கு தயார் நிலையில் உள்ளனர்.அது மட்டுமின்றி, இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் சேவை கோரப்பட்டுள்ளது. மின்சாரத்துறையினர், மின் இணைப்பு துண்டிக்காமல், தொடர்ந்து மின் வினியோகம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். மேலும், ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.இது தவிர, தீயணைப்புத்துறை சார்பில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் எவ்வளவு வந்தாலும் சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ