உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமங்களுக்கு ரூ.11 கோடியில் குடிநீர் திட்டம்

கிராமங்களுக்கு ரூ.11 கோடியில் குடிநீர் திட்டம்

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தோலம்பாளையம் ஊராட்சியில் கோபனாரி, பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, காலனி புதுார், செங்குட்டை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடிநீர் என்பது உப்பு தண்ணீர் அதாவது போர் வாட்டர் மட்டும் தான். குடிநீர் வேண்டும் என இப்பகுதி பழங்குடியின மக்கள் முன் வைக்கும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து, இந்த மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூறியதாவது:-நாங்கள் உப்பு தண்ணீரை தான் குடிக்கின்றோம். அனைத்து உயர் அதிகரிகளும் எங்கள் மலை கிராமங்களை நன்கு அறிவார்கள். எங்களது தேவையை கேட்பார்கள் ஆனால் அவர்களால் பல ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதுகுறித்து, தோலம்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெயா கூறுகையில், ''நீலகிரி எம்.பி. ராஜாவின் முயற்சியால் இக்கிராமங்களுக்கு ரூ.11 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, இதற்கான பணிகள் துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை