உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் டிரைவர் பலி

வாகன விபத்தில் டிரைவர் பலி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, விபத்தில் டிரைவர் இறந்தது குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் யுவராஜ்,27. இவர், பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, எதிரே சூளேஸ்வரன்பட்டியில் இருந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுவராஜை, அப்பகுதி மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவர் ரமேஷ் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை