உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிரைவர் கொலை மூவர் கைது

டிரைவர் கொலை மூவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அனுப்பர்பாளையத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் தமிழ்செல்வன்,25. இவர், பக்கத்து வீட்டை சேர்ந்த, 16வயது சிறுவனுடன் கடந்த மாதம் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் உறவினர் திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சந்தீப்,25, அவரது நண்பர் தனசேகர், 22 ஆகியோர், தமிழ்செல்வனை அனுப்பர்பாளயைம் வாய்க்கால் மேடு பகுதிக்கு நேற்றுமுன்தினம் மாலை வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மூவரும் சேர்ந்து தமிழ்செல்வனை சராமரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த தமிழ்செல்வனை அருகில் இருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை