உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவுச்சான்று பெற அறிவுரை

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவுச்சான்று பெற அறிவுரை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவுச்சான்று பெற, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகள், லாரி சர்வீஸ், தனியார் மக்கள் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் விதியின் கீழ், பதிவு செய்து, பதிவுச்சான்று பெற வேண்டும். மேலும் இரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''பதிவுச்சான்று பெறாமல் வாகனங்களை இயக்கினால், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின்கீழ் அது தவறு. பதிவுச்சான்று பெறாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பான் கார்டு, ஆதார் கார்டு, இ.பி., கார்டு, ஜி.எஸ்.டி., போன்ற ஆவணங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவுச்சான்று பெறலாம்,'' என்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை