உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சை உரசினார் டிரைவர்; பற்றிக்கொண்டது தகராறு

பஸ்சை உரசினார் டிரைவர்; பற்றிக்கொண்டது தகராறு

கோவை; கேரள மாநிலம் வேலாந்தவளம், பாலாஜி நகரை சேர்ந்தவர் பெரோஸ், 33; தனியார் பஸ் டிரைவர். நேற்று முன்தினம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பஸ்சை வெளியில் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அவரது பஸ்சுக்கு அருகில், மற்றொரு தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக பெரோஸ் ஓட்டிய பஸ், பக்கத்தில் நின்ற பஸ்சில் உரசியது.இதில் அந்த பஸ்சின் ஒரு பக்க கண்ணாடி உடைந்தது. அந்த பஸ் டிரைவர் சந்தோஷ், பெரோஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தோஷ், பெரோசை தாக்கினார். பெரோஸ், காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை