உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிகாட்டி பலகையில் தவறு வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

வழிகாட்டி பலகையில் தவறு வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

வால்பாறை: வால்பாறையில், வழிகாட்டி பலகையில் மாறுபட்ட தகவல் எழுதப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். வால்பாறை அருகே, மாணிக்கா மாதா கோவில் சந்திப்பு உள்ளது. அங்கு ஐந்து ரோடுகள் பிரியும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பெரிய பெயர் பலகையில் மாணிக்கா மாதா கோவில் சந்திப்பில் இருந்து குரங்குமுடி செல்ல, 10 கி.மீ.,துாரம் எனவும், சோலையாறு அணை செல்ல, 19 கி.மீ.,எனவும் எழுதப்பட்டுள்ளது. அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய வழிகாட்டி பலகையில்  குரங்குமுடி, 7 கி.மீ.,துாரம் எனவும், சோலையாறு அணை, 20 கி.மீ.,துாரம் எனவும் எழுதப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இருவேறு தகவலுடன் தவறாக எழுதப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ‘சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. ‘சில இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைகின்றனர். எனவே, வழிகாட்டி பலகையில் சரியான தகவல் தெரிவிக்க வேண்டும். வால்பாறை நகர் மற்றும் சுற்றுலா தலங்களில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை