மேலும் செய்திகள்
மழைக்கு 'பஞ்சர்' ஆன ரோடுகள்
27-Jun-2025
மேம்பாலத்தில் ஒளிராத மின்விளக்குகளால் அவதி
12-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் அறிவிப்பை மதிக்காமல் வாகன ஓட்டுநர்கள், 'ஒன்வே' வழித்தடத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், அரசம்பாளையம் பிரிவில் மேம்பாலம் முடியும் இடம் அருகே, 'ஒன்வே' வழித்தடத்தில், எதிர்திசையில் பயணிப்பதை தவிர்க்க அம்புக்குறியுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஆனால், வாகன ஓட்டுநர்கள் பலர் இதை கவனிக்காமலும், விதிமீறியும் செல்கின்றனர். மேலும், அரசம்பாளையம் பிரிவில் இருந்து கிணத்துக்கடவு செல்ல ஏழூர் பிரிவு சென்று (4 கி.மீ.,) திரும்பி வரவேண்டி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள், ஆபத்தை உணராமல் 'ஒன்வே'யில் செல்கின்றனர்.மேலும், இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி மேம்பாலம் அருகே 'யு டர்ன்' பகுதி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
27-Jun-2025
12-Jun-2025