உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்காமலை கிராஸ்ஹில்ஸில் வறட்சி; குடிநீருக்கு தவிக்கும் வனவிலங்குகள்

அக்காமலை கிராஸ்ஹில்ஸில் வறட்சி; குடிநீருக்கு தவிக்கும் வனவிலங்குகள்

வால்பாறை; அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் நிலவும் வறட்சியால், பசுமையான புல்வெளிகள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழையினால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வெயில் நிலவுகிறது.காலை, மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, வால்பாறையில் நிலவும் கடும் வறட்சியினால், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் உள்ள புல்வெளிகள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், இங்குள்ள வனவிலங்குகள் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்தாலும், வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், போதிய அளவு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வறட்சியினால் வனவிலங்குகள் பாதிக்காமல் இருக்க, வனத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், வறட்சியால் புல்வெளிகள் காய்ந்துள்ள பகுதியில், தீத்தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ