மேலும் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து மெக்கானிக் பலி
3 minutes ago
காணாமல் போன சிறுவனின் உடல் குளத்தில் மீட்பு
3 minutes ago
கொடி கம்பங்களால் சாலையோரங்கள் சேதம்
7 minutes ago
கோவை: மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, செட்டிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் பேசுகையில், ''இன்று உலக நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை, இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதுதான். வயது வரம்பின்றி, சமுதாயத்தில் போதை பழக்கம் நிலவி வருகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்,'' என்றார். முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், பேராசிரியர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
3 minutes ago
3 minutes ago
7 minutes ago