உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

கோவை; என். ஜி. பி. கலை அறிவியல் கல்லுாரியில், யங் இந்தியன்ஸ், யங் இந்தியன் ஹெல்த் மற்றும் யுவா கிளப் சார்பில், 'நமக்கு வேண்டாம்' என்னும் தலைப்பில் போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கிடும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் செயலர் தவமணி தேவி கூறுகையில், '' ஒரு முறை என்னதான் இருக்கு என்று பார்க்கலாம் என்ற பலர் நண்பர்களுடன் சேர்ந்து துவக்குகின்றனர். நாளடைவில் போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமைகளாகி வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். இப்பழக்கம் உள்ளவர்களுக்கு, நரம்பு தளர்ச்சி, மனநல பாதிப்பு, சிந்தனைத்திறன் குறைதல், போன்ற பல்வேறு உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்கள் மிகவும் கவனமாக இதுபோன்ற பழக்கங்களில் இருந்து விலகி இருக்கவேண்டும்,'' என்றார். நிகழ்வில், டாக்டர் என். ஜி. பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, அறங்காவலர் அருண் பழனிசாமி, இயக்குனர் மதுரா, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்லுாரி முதல்வர் சரவணன், யங் இந்தியா அமைப்பின் சிவசங்கர், சஞ்சீவ் பத்ரி, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகடமி நிறுவனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ