மேலும் செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
11-Oct-2025
கோவை: ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியின் முதல்வர் பங்கஜ் தலைமைவகித்தார். பேரணி, ஆர்.எஸ்.புரம் சாலை வழியாக குமாரசாமி குளம் வரை வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. போதை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்கள், கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
11-Oct-2025