உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் கடத்தல் வழக்கு; மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

கோவை; போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில், மூவருக்கு தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த, திருமுருகன் பூண்டியை சேர்ந்த ரமேஷ்குமார்,45, பனியன் வியாபாரியான, அங்கேரிபாளையம் ரோட்டை சேர்ந்த ராம்ராஜ்,43, ஆகியோர் போதைப்பொருள் கடத்துவதாக, மத்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இருவரிடமும் விசாரித் தபோது, ரமேஷ்குமாரின் ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த செல்வக்குமார்,40 வீட்டில், போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். கோவை மத்திய புலனாய்வு பிரிவினர், 2009, நவ., 23ல், திருப்பூரில் உள்ள செல்வக்குமார் வீட்டில் சோதனையிட்டனர். 100 கிலோ எடையுள்ள, ரூ.10 கோடி மதிப்புள்ள 'எபிடிரின்' என்ற போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தார். மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கோவை போதைப்பொருள் கடத்தல் வழக்கு சிறப்பு கோர்ட்டில் (இ.சி.கோர்ட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட செல்வக்குமார், ராம்ராஜ், ரமேஷ்குமார் ஆகியோருக்கு தலா, 10 ஆண்டுகள் சிறை, மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மத்திய அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை