உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தவறு நடப்பதை தடுக்க ‛டியூகாஸ் நடவடிக்கை

 தவறு நடப்பதை தடுக்க ‛டியூகாஸ் நடவடிக்கை

கோவை: முறைகேடுகள் நடக்காத வண்ணம், டியூகாஸில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்), 15 நபர்கள் போலி நகைகளை அடமானம் வைத்து சுமார் ரூ.3 கோடி அளவில் நகை கடன் பெற்று நிதி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற குற்றங்கள் வருங்காலங்களில் நடக்காமல் இருக்க, துடியலுாரில் இருக்கும் தலைமையகம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம், சங்கனுார், ராமகிருஷ்ணாபுரம், இடிகரை, கே.கே.புதுார், டாடாபாத், சித்தாபுதுார், உடையாம்பாளையம், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிளைகளில் பணிபுரியும் தங்க நகை மதிப்பீட்டாளர்களை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வெளியில் இருந்து ஒரு தங்க நகை மதிப்பீட்டாளர் மற்றும் மேலாளர் நிலைக்கு மேல் உள்ள இருவர் என குழுவினர் கொண்டு, காலமுறை ஆய்வு நடத்தவும், அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, டியூகாஸ் இணைப்பதிவாளர் கோமதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ