உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்

நள்ளிரவில் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்

அன்னுார்; நள்ளிரவில் குளத்தில் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கரியாம்பாளையத்திற்கு தெற்கே இரண்டு ஏக்கர் பரப்பளவில் திருமலை நாயக்கன் குட்டை உள்ளது. இந்த குட்டையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மண் எடுத்து கடத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அன்னுார் தாசில்தார் யமுனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதி இல்லாமல், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி மண் எடுத்து இரண்டு டிப்பர் லாரிகளில் நிரப்பி கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த லாரிகளை சுற்றி வளைத்தனர். இதில் ஒரு டிரைவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பினார். இதையடுத்து வருவாய்த் துறையினர் இரண்டு டிப்பர் லாரிகளையும் அன்னுார் போலீசில் ஒப்படைத்தனர். 'லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை