உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சைமா தலைவராக துரை பழனிசாமி தேர்வு

சைமா தலைவராக துரை பழனிசாமி தேர்வு

கோவை; தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) 66வது பொதுக்குழு கூட்டம், 'சைமா' வளாகத்தில் நடந்தது. இதில், ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன செயல் இயக்குனர் துரை பழனிசாமி, 2025--26ம் ஆண்டுக்கான 'சைமா' தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் சுலோச்சனா காட்டன் மில் நிர்வாக மேலாளர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திண்டுக்கல் சிவராஜ் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் சிவராஜ், உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'சைமா' புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட துரை பழனிசாமி, ஜி.எஸ்.டி., சீரமைப்புகளை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “புத்தாக்கம், போட்டித்தன்மை, அரசின் உதவி ஆகியவற்றால், ஜவுளித்துறையானது தற்போதைய சவால்களில் இருந்து மீள்வதுடன், உலகின் வலிமையான ஜவுளித் தலைமை என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்தியாவுக்கு மிக முக்கியப் பங்களிப்பாளராக திகழும். புதிய தலைமுறை தொழில்துறை தலைவர்கள், செயற்கை இழைகளைப் பயன்படுத்தி, புத்தாக்கம் கொண்ட உற்பத்தித்திறனுடன், உலக சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை