உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் இ--பாஸ் பணியாளர்கள்

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் இ--பாஸ் பணியாளர்கள்

மேட்டுப்பாளையம்; கல்லாறு அருகே செயல்படும், இ--பாஸ் சோதனைச் சாவடி பணியாளர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு தூரிப்பாலம் அருகே, நீலகிரி மாவட்டத்திற்கான இ--பாஸ் சோதனை சாவடி, அரசு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பகலில் நான்கு பெண் பணியாளர்கள் உள்பட எட்டு பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று இரவில் ஆண் ஊழியர்களும், போலீசாரும் பணியில் ஈடுபடுகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணம் கூறி, அடிக்கடி இந்த சோதனை சாவடிக்கு குடிநீர் வினியோகம் வழங்குவதில்லை. தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் அலுவலக பணியாளர்களும், போலீசாரும் அவதிப்படுகின்றனர். இது குறித்து சோதனை சாவடி பணியாளர்கள் கூறியதாவது: ஒரே கழிப்பிடத்தை ஆண், பெண் இருவரும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் சரியாக வராததால் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய முடியவில்லை. பணியாளர்கள் தங்கள் சொந்த செலவில், டிராக்டர் தண்ணீரை வாங்கி, கழிப்பிடத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் பெண்களுக்கு என, தனியாக கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி