உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பொள்ளாச்சி, ;டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பொள்ளாச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.டீசல், உதிரிபாகங்கள், புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வு போன்ற காரணங்களினால், வாடகை உயர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி வட்டார எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல், 14ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.வேலை நிறுத்த போராட்டத்தால், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், ஜே.சி.பி., வாகனங்கள் அனைத்தும் கோவை ரோட்டில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தால், இந்த வாகனங்களை கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை