உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இ.கம்யூ., நுாற்றாண்டு மரக்கன்று நடும் விழா

 இ.கம்யூ., நுாற்றாண்டு மரக்கன்று நடும் விழா

கோவை: இ.கம்யூ., நுாற்றாண்டை முன்னிட்டு, சூலூரில் உள்ள பாரதிபுரத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு, வட்டார துணை செயலாளர் பேரின்பம் தலைமை வகித்தார். பாரதிபுரம் ஏரிக்கரை மைதானம் மற்றும் நொய்யல் துணை வாய்க்கால் கரையில் பனை, புங்கமரம், நாவல் மரம், கொய்யா உட்பட, 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் இ.கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மவுனசாமி, சூலுார் தெற்கு வட்டார செயலாளர் வசந்தகுமார், மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணியம், வட்டார செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை