மேலும் செய்திகள்
வடசித்துார் பள்ளியில் நூற்றாண்டு விழா
08-Mar-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் செல்விராணி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) தங்கராசு முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நூற்றாண்டு சுடர் தொடர் ஓட்டம், நினைவு மரம் நடுதல், நூற்றாண்டு ஜோதி ஏற்றுத்தல் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் பணியாற்றும் சிற்றுண்டி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பேசியதாவது:நான் படித்த பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், பங்கேற்று பேசுவது பெருமையாக இருக்கிறது. இந்நிகழ்வை பள்ளி விழாவாக பார்க்கவில்லை, எனது குடும்ப விழாவாக பார்க்கிறேன். நான் பள்ளி, கல்லூரி என, 10 இடங்களில் கல்வி பயின்று இருக்கிறேன். ஆனால், இந்த பள்ளி எனக்கு தனி சிறப்பு. இப்பள்ளியில் எனது தந்தை ஆசிரியராக இருந்தார். எனது குடும்பத்தினர் முழுவதும் இங்கு கல்வி பயின்றனர்.தற்போது, தமிழகத்தில் கல்வி கற்றோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல, ஒரு மனிதனை கல்வியே உயர்த்தும். மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்று கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார். நிறைவாக மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
08-Mar-2025