தம்பு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கண்காட்சி
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கண்காட்சி நாளை நடக்கிறது.பள்ளி வளாகத்தில் நடக்கும் இக்கண்காட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள, 25க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நேரடியாக உரிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். பல்வேறு உயர் படிப்புகள், அதற்கான தொழில், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியில் எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இத்தகவலை தம்பு மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் பிரீத்தா பிரியதர்சினி தெரிவித்தார்.மேட்டுப்பாளையம், ஜன. 25--- லிங்காபுரம்--காந்தவயல் இடையே, சாலையை விரிவாக்கம் செய்ய, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் அருகே, காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து காந்தவயல், மொக்கை மேடு, காந்தையூர், உளியூர், ஆலூர் ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும், வேலைக்குச் செல்லும் ஆட்களும், காந்தையாற்றை கடந்து சென்று வருகின்றனர். காந்தையாற்றில் தண்ணீர் இருக்கும் போது பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை.இதுகுறித்து காந்தவயல் பகுதி மலைவாழ் மக்களும், லிங்காபுரம் பகுதி விவசாயிகளும் கூறியதாவது: காந்தையாற்றில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்ற போது, ஏற்பட்ட அலைகளால் சாலையின் இரு பக்கம் மண் அரிப்பு ஏற்பட்டு, மிகவும் குறுகிய சாலையாக மாறியுள்ளது. மண் அரிப்பு ஏற்படுவதற்கு முன், இந்த சாலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே இரண்டு வாகனங்கள் சென்று வந்தன. ஆனால் தற்போது மண் அரிப்பு ஏற்பட்டதால், ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு, சாலை உள்ளது.ஆற்றில் தண்ணீர் உள்ளதால், பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெறவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையின் இரண்டு பக்கம் மண் கொட்டி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன், பாலம் கட்ட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.