உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி பிரிவு குழு கூட்டம்

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி பிரிவு குழு கூட்டம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாற்று திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி பிரிவின் கூட்டம் நடந்தது.கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜம்மாள் தலைமை வகித்தனர். வட்டார மேற்பார்வையாளர் ரேணுகா முன்னிலை வகித்தார். இதில், 'நலம் நாடி' செயலியை பயன்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், வீட்டு வழி பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பலன்கள் சென்று சேர்கின்றனவா, அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்று திறன் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்களின் பயன்கள், தேசிய அடையாள அட்டை யூ.டி.ஐ.டி., கார்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடந்தது. மலைவாழ் குழந்தைகளுக்கான கற்றல் மேம்பாட்டு பணிகள், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி