கோவையில் இன்று கல்வி கடன் முகாம்
கோவை; உயர் கல்வி பயில கல்விக்கடன் வழங்கும் முகாம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லுாரியிலும், ஈச்சனாரி கற்பகம் கல்லுாரியிலும் இன்று நடக்கிறது. கலெக்டர் அறிக்கை: எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற கல்வி நிறுவனங்களில், உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள், உயர் கல்விக்கான கல்வி கட்டணம் செலுத்த, கடன் பெறும் முகாம் இன்று நடக்கிறது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழோடு, மாற்று சான்றிதழ், கல்லுாரி கட்டணம் மற்றும் கல்லுாரி சேர்க்கை கட்டண ரசீதுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், உறுதிமொழி சான்று, கல்லுாரி அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். ஈச்சனாரி கற்பகம் கல்லுாரியிலும் இம்முகாம் நடக்கிறது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.