உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்

நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்

கோவை; கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஜோகோ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி சார்லஸ் காட்னின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.அவர் பேசுகையில், ''கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும், கல்வியால் மட்டுமே நாம் நினைத்ததை அடைய முடியும். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், படித்ததை பிடிக்கும் படி மாற்றிக் கொள்ளுங்கள். சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். கல்லுாரி எனும் அற்புதமான வாய்ப்பில் மாணவர்கள் நிறைய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும், '' என்றார்.கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலர் லாவண்யா, துணைத் தலைவர் மிதிலேஷ், துணைச் செயலர் விதுப் பிரதிக் ஷா, முதல்வர் கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ