உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் கல்வி உளவியல் பயிற்சி

வேளாண் பல்கலையில் கல்வி உளவியல் பயிற்சி

கோவை; கோவை வேளாண் பல்கலையில், மாநில அளவிலான கற்பித்தல் கலை மற்றும் கல்வி உளவியல் பயிற்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணைப்படி, அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், பர்கூர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையங்கள், இலாங்குடி பாலிடெக்னிக் கல்லுாரி, ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் மற்றும் குறிப்பிட்ட கூட்டுறவு மேலாண்மை நிலைய சிறப்பு விரிவுரையாளர்களுக்கு, மாநில அளவிலான கற்பித்தல் கலை மற்றும் கல்வி உளவியல் பயிற்சி, கோவை வேளாண் பல்லைக் கழகத்தில் இன்று துவங்கி, இரு நாட்கள் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. இதில், கூட்டுறவு மேலாண்மை, உளவியல் சார்ந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை