கோழிப்பண்ணையில் முட்டை திருட்டு
நெகமம் : நெகமம் தாசநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணையில், கடந்த 2 மாதத்திற்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த டேவிட் என்பவர் சூப்பர்வைசராக பணியில் சேர்ந்தார்.கடந்த 16ம் தேதி கோழி பண்ணையில் இருந்து, 10 ஆயிரத்து 500 முட்டைகளை திருடி கரூரைச் சேர்ந்த கார்த்தி, 36. என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.இது பற்றி கோழிப்பண்ணை நிறுவனத்திற்கு தகவல் தெரிய வர டேவிட் மீது நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரின் பேரில், வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.