உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு

ஆற்றில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு

மேட்டுப்பாளையம்: கோவை கருமத்தம்பட்டி அருகே சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி, 85. இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின் பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ., ராஜன் தலைமையிலான லைப் காட்ஸ் போலீசார் ஆற்றில் குதித்து முதியவரை மீட்டு, பரிசில் வாயிலாக கரைக்கு உயிருடன் கொண்டு வந்தனர். பின் அங்குசாமியின் உறவினர்களை அழைத்து அவர்களிடம் அவரை பத்திரமாக ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ