இரவில் வயதானவர்கள் தனியாக வெளியில் வர வேண்டாம்
மேட்டுப்பாளையம் ;பண்ணை வீடுகளில் உள்ள வயதானவர்கள், இரவில் தனியாக வெளியில் வர வேண்டாம் என காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.கோவை மாவட்டம் காரமடை அருகே தாயனூரில் தனியார் மண்டபத்தில், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், பண்ணை வீடுகள் மற்றும் தனியாக வீட்டில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் பேசியதாவது:- பண்ணை வீடுகள் மற்றும் தனியாக வீட்டில் இருப்பவர்கள், தங்களின் இடத்தைச் சுற்றி சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். காம்பவுண்ட் சுவர் மற்றும் வேலிகள் அமைக்க வேண்டும். வயதானவர்கள் இரவு நேரத்தில் தனியாக வெளியில் வர வேண்டாம்.தோட்டத்திற்கு அருகில் இருக்கும் தெரிந்தவர்களின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். காரமடை போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அந்நிய நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் உடனே போலீசாருக்கு தெரியப்படுத்தவும். முன் பின் தெரியாத நபர்களை, தோட்டத்து வேலைக்கோ அல்லது வீட்டு வேலைக்கோ பணியமர்த்த வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.----