உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது விற்ற மூதாட்டி கைது

மது விற்ற மூதாட்டி கைது

கோவை; கெம்பட்டி காலனி பகுதியில் சட்ட விரோதமாக, மது பாட்டில்கள் விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். பெரிய கடைவீதி போலீசார், கெம்பட்டி காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ராமர் கோவில் மார்க்கெட் அருகில் ஒருவர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது, கெம்பட்டி காலனி, முத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகாத்தாள், 65 என்பவர் மது பாட்டில்களை வாங்கி வைத்து, சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. முருகாத்தாளை கைது செய்து, அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை