புதிய நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சி; தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் பொள்ளாச்சி கிளை கூட்டம், பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க அரங்கில் நடந்தது. மாநில பொருளாளர் ரமணி தலைமை வகித்தார். தொடர்ந்து, பொள்ளாச்சி கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக சிவக்குமார், செயலாளராக சிங்காரவடிவேல், பொருளாளராக ஜெயபிரகாஷ், இணைச் செயலாளராக ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடத்துவது, சமூக சேவகர் ராதாகிருஷ்ணனுக்கு நுாற்றாண்டு விழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.