உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பகலில் ஒளிரும் மின்விளக்குகள் அலட்சியத்தால் வீணாகும் மின்சாரம்

 பகலில் ஒளிரும் மின்விளக்குகள் அலட்சியத்தால் வீணாகும் மின்சாரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பகல் நேரத்தில் அணையாமல் எரிகிறது. கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் ரோட்டில், அதிக அளவு கடைகள் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இரவு நேரத்தில் மக்கள் பயமின்றி பயணிக்கவும், விபத்தை தவிர்க்கவும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு சில பகுதிகளில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இத்துடன் திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த மின் விளக்குகள் அனைத்து இடங்களிலும் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தி வந்தனர். ஆனால் இன்று வரை இந்த பிரச்னைக்கு தீர்வில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரிகின்றன. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் கூறியதாவது: இரவு நேரத்தில், சர்வீஸ் ரோட்டில் போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதை சரி செய்யாமல், பகல் நேரத்தில் மின் விளக்குகள் எரிவது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. வரும் நாட்களிலாவது, இரவு நேரத்தில் முழுமையாக மின் விளக்குகளை எரியும் வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். பகலில் மின்விளக்கு ஒளிராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி