கார்--பைக் மோதியதில் மின் கம்பம் உடைந்தது
அன்னுார்,; அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், ஒட்டர்பாளையம் பிரிவில், நேற்று மாலை அதிவேகமாக வந்த காரும் எதிர் திசையில் வந்த மோட்டார் பைக்கும் மோதிக்கொண்டன. இதையடுத்து கார் மற்றும் பைக் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீதும் மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது.பைக்கில் வந்த பிஞ்சமடையைச் சேர்ந்தவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் கிரேன் வாயிலாக உடைந்த மின்கம்பத்தை அகற்றி மின் சப்ளையை மீண்டும் துவக்கினர்.