மேலும் செய்திகள்
ரோட்டோரம் கிடக்கும் பயனற்ற மின்கம்பங்கள்
03-Mar-2025
வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு
05-Mar-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, என்.எஸ்.கே., கார்டன் குடியிருப்பில் உயர் மின்னழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுதடைகிறது.கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் என்.எஸ்.கே., கார்டன் பகுதியில், குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இங்கு நீண்ட நாட்களாக, உயர் மின்னழுத்தம் மற்றும் குறைவான மின்னழுத்தம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.கடந்த வாரம், இங்கு உயர் மற்றும் குறைவான மின் அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ள டிவி., லேப்டாப், மின் மோட்டார்கள், ஸ்டெபிலைசர் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகி உள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாயினர்.எனவே, இந்த மின் பிரச்னையைப் போக்க, மின்வாரியம் சார்பில், இப்பகுதியை ஆய்வு செய்து புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.மக்கள் கூறுகையில், 'தினமும் பலமுறை மின்வெட்டு ஏற்படுகிறது. வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. இப்பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்,' என்றனர்.
03-Mar-2025
05-Mar-2025