மேலும் செய்திகள்
மின் கணக்கீடு மாற்றியமைப்பு
10-Oct-2025
பொள்ளாச்சி: மின்வாரியம், அங்கலக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள இரண்டு பகிர்மானங்கள், மின்நுகர்வோரின் வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், புதிய உதவி பொறியாளர் கோட்டூர் அலுவலகத்திற்கு கோட்டூர் பகிர்மானம், வடக்கு தேவனுார்புதுார் அலுவலகத்திற்கு கரியாஞ்செட்டிபாளையம் பகிர்மானமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்சங்கம்பாளையம் மின் பகிர்மானத்தில் ஏற்கனவே ஒற்றைப்படை மாதத்தில் மின்கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது, இரட்டைப் படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, இம்மாதம் மின் கணக்கீடு செய்யப்படவுள்ளது. எனவே, மின்நுகர்வோர், இணைப்புகளின் மின் கட்டணத்தை மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில், இந்த மின்பகிர்மானத்தில், இரட்டைபடை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படும். இத்தகவலை அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் கூறியுள்ளார்.
10-Oct-2025