மேலும் செய்திகள்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-Jun-2025
கோவை; மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோவை டாடாபாத் மின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது; கோவை வடக்கு கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மின் வாரியத்தில் உள்ள, 40 ஆயிரம் ஆரம்பகட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். 20-23 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பதவி மாற்றம், ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்குதல் மற்றும் மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.கோவை மைய கோட்ட செயலாளர் விஜயன், மதுக்கரை கோட்ட தலைவர் சுந்தரவடிவேல், சீரநாயக்கம்பாளையம் கோட்ட தலைவர் சுரேஷ்குமார், உழைக்கும் பெண்கள் கன்வீனர் கலைச்செல்வி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மின் உழியர்கள் பங்கேற்றனர்.
20-Jun-2025