உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிவி இணைப்பு துண்டிக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

டிவி இணைப்பு துண்டிக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

கோவை : மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.l மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.l தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.l இடி, மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. l மழை சமயங்களில் ஒதுங்க, மின்கம்பிகள், மின்கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத, தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.l இடி இடிக்கும் போது, 'டிவி' கேபிளின் தொடர்பை துண்டிக்க வேண்டும். கேபிள் டிவி ஒயர்களை தொடக்கூடாது. l மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள, இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது, கொடி கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும்.l மின்கம்பி அறுந்திருந்தால் தொடுவது, மிதிப்பதை தவிர்த்து உடனடியாக, மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டால், 94987 94987 என்ற எண்ணில் அழைத்து, புகாரை பதிவு செய்ய வேண்டும். கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்புராணி, இத்தகவலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ