மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் சிறப்பு முகாம்
03-Apr-2025
பிப்., கட்டணத்தையே இம்மாதமும் செலுத்துங்க!
05-Apr-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நெகமம் மின் பகிர்மான கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நெகமம் கோட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.* அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அங்கலகுறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.
03-Apr-2025
05-Apr-2025