மேலும் செய்திகள்
கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
12-May-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சியில் மக்களுக்கு இலவச பட்டா வழங்க தடையாக இருக்கும் மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சி குரும்பபாளையம் கிராமத்தில், கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் பல முறை மனு கொடுத்து வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள, 1.5 ஏக்கர் நிலத்தில், 82 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் மின் கம்பங்கள் இருப்பதால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அந்த இடத்தில் இருக்கும் மின்கம்பங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
12-May-2025