உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையை மறித்து நின்ற யானை; மதிக்காமல் சென்ற வெளிநாட்டவர் மரணம்

சாலையை மறித்து நின்ற யானை; மதிக்காமல் சென்ற வெளிநாட்டவர் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வால்பாறை: வால்பாறை அருகே சாலையை மறித்து நின்ற யானையை, மதிக்காமல் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி, யானை தாக்கியதில் உயிரிழந்தார்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் டைகர் வேலி. இங்கு நேற்று மாலை யானைகள் முகாமிட்டிருந்தன. இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை தொலைவில் நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். அப்போது வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனியில் பிறந்த மைக்கேல் (77) என்பவர் யானை நிற்பது தெரிந்தும், பைக்கில் சென்று யானை மீது மோதினார். கோபமடைந்த யானை, எழுந்து ஓடிய அவரை துரத்தி சென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வால்பாறை வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யானை அருகே செல்வதும், அந்த யானை அவரை தாக்குவதையும் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ